தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரகாளிபுரத்தை சேர்ந்த குருசாமி. இவருடைய மனைவி ராஜேஷ்வரி. இன்று நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிரதமர் மோடி அறிவுருத்தலின் பேரில் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை அனைத்து பகுதிகளிலும் மக்கள் வெளிவராமல் கடைபிடித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு அனைத்து பகுதிகளும் வெரிச்சோடி கானப்படுகிறது.
இதனால் ரோட்டோரத்தில் வாழும் மக்கள் உணவின்றி தவிப்பதை கண்டு ராஜேஸ்வரி தனது கனவரிடம் தெரிவித்துள்ளார். இருவரும் உணவு தயாரித்து கொடுக்க முடிவு செய்து உணவுகளை தயாரித்து பார்சல் செய்து தனது மகன்கள் தமிழ்அரசு, கிருத்திக் ரோசன் ஆகியோருடன் போடிநாயகனூர் பஸ்ஸ்டாப் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவுகளை வழங்கினர். கடைகள் ஏதும் இல்லாமல் காலை முதல் பசியுடன் இருந்தவர்கள் மகிழ்ச்சி பொங்க உணவுகளை வாங்கி சாப்பிட்டனர்.
பசியால் என்ன செய்வோம் என்று தெரியாமல் தவித்தோம் உங்கள் உதவி மறக்க முடியாதது என்று கண்ணீருடன் இவர்களை வாழ்த்தினர். இது பற்றி ராஜேஷ்வரி பேசுகையில் இதுபோல் சில நேரங்களில் உதவிகள் செய்திருக்கிறேன். இன்று சுமார் 20 நபர்களுக்கு கொடுத்தோம். நாளையும் சமைத்து கொடுக்க வீட்டில் ஏற்படு செய்துள்ளோம். அதிக அளவு செய்ய முடியா விட்டாலும் என்னால் முடிந்த அளவிற்கு செய்து கொடுப்போம். இதுபோல் உதவுவதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம் என்று தெரிவித்தார்.