காசிபாளையம், கொடிவேரியில் கொரோனா தடுப்புபணிகள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிபாளையம் மற்றும் பெரிய கொடிவேரி ஆகிய பேரூராட்சிகளில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் ஆய்வுகள் மேற்கொண்டார்.


ஆய்வின் போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் முழு உடல் கவசம் ஆகியவற்றை வழங்கினார். முன்னதாக பெரியகொடிவேரி பேரூராட்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  கோபிசெட்டிபாளையம் தினசரி காய்கறி சந்தையை பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. ப


வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் யூடியூப் மற்றும் கல்வித் தொலைக்காட்சிகள் மூலமாக பேராசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப் பட்டு வருகிறது.அதனை மாணவர்கள் பார்த்து பாடங்களை கற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எனது வேண்டுகோளாக  வைக்கின்றேன் எனவும் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல். ஏ. கந்தசாமி,  ஈரோடு ஆவின் தலைவர் காளியப்பன்,ஒன்றிய கழக செயலாளர் மனோகரன்,  காசிபாளையம் பேரூராட்சி(கோபி ) செயல் அலுவலர் ஏ. ரமேஷ் குமார்,பேரூர் கழக செயலாளர் மணி (எ )சந்திரசேகர், பெரிய கொடிவேரி பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ், பேரூர் கழக செயலாளர் என். எஸ். கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post