கொரோனாவை தடுக்க இளைஞர்கள் இலவசமாக முகக்கவசம் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உலக நாடுகள் அணைத்ததையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை அந்த வைரஸ் மிரட்டி வருகிறது. அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவை பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பள்ளி, கல்லூரி, போக்குவரத்து, தொழிற் கூடங்கள் மூட வலியுறுத்தி இருந்தது. பொதுமக்கள் கூடும் அணைத்து பொது நிகச்சிகளுக்கும் தடை விதித்திருந்தது.
பொதுமக்கள் தங்களை தனிமை படுத்தி இருக்குமாறும், மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு பிறப்பித்திருந்தது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்ததால் மீண்டும் மக்கள் ஊரடங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துமார்ச் 31 தேதி வரை விட்டுக்குள் இருக்குமாறு அறியுறுத்தியிருந்தது. இந்தநிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர் இளைஞர்கள் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிகை நடவடிக்கைக்காக தங்கள் சொந்த செலவிலும், தங்களுக்கு தெரிந்த பனியன் நிறுவனகளிலும் மீதம் உள்ள துணிகளை கேட்டு வாங்கி 2,000-க்கும் மேற்பட்ட முககவசம் தயாரித்து தாராபுரம் ரோடு, புதூர் பிரிவு, சந்தரபுரம் பிரிவு, வெள்ளியங்காடு, முத்தையன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் செல்பவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பொதுமக்களும் முககவசத்தை ஆர்வமுடன் வாங்கி அணிந்து சென்றனர்.