தேனி மாவட்டம் வீரபாண்டியல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கில் வனத்துறை அலுவலர் கௌதம் வாழ்த்துறை வழங்கி தொடங்கி வைத்தார். தற்பொழு உலகையை ஆட்டி வைக்கும் கொரானா வைரஸ் பற்றி விழிப்புணர்வு குறித்தும் பொது மக்கள் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும் தற்போது மாறி வரும் சீதோசன நிலையால் கோடை காலம் ஆரம்பமாகும் சூழலில் குரங்கணி போன்ற காட்டுத்தீ விபத்து பற்றி விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி வாழ்த்துறை வழங்கி பேசியபோது இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரிடர் பற்றி விளக்கமளித்தார் மேலும் பேரிடர் மேலாண்மையில் காவல்துறை முதன்மை வகித்து தனது கடமையை செய்து வருகிறது எனக் கூறினார்.
மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பேரிடர் மேலாண்மை காலங்களில் தேனி மாவட்டம் முழுவதும் காடுகள் மலைப் பகுதிகள் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் கட்டுத்தீ பற்றி எரியும் சூழல் சுதிகமாக இருப்பதால் மிகவும் ஆபத்தான பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தபடும். மேலும் தேனி மாவட்டத்தில் தான் முதல் நிலை தகவல் தருபவர் (ஃபஸ்ட் ரெஸ்பான்டர்)என பெண்கள் உட்பட அதிகமான நபர்கள் உள்ளனர். மேலும் தமிழகத்தில் மட்டும் தான் விலங்குகளுக்கும் முதல் நிலை தகவல் தருபவர் அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு எனக் குறிப்பிட்டார்.இந்த கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்டுபணித் துறை 108 ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் மருத்துத் துறை வனத்துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Tags:
மாவட்ட செய்திகள்