கொரானா நோய் தடுப்புக்கு நிதி வழங்கிய தருமபுர ஆதீனத்திற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை பாராட்டு
மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
தற்போது உலகமெங்கும் கொரானா நோய் காற்றைவிட வேகமாக பரவி வருகிறது .
இந்த நோய் தடுப்புக்கு தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் வேண்டுகோள். விடுத்தார் .
அந்த வேண்டுகோளை ஏற்று சைவத்தையும் தமிழையும் இரு கண்களாக வளர்த்துவரும் தருமபுர ஆதீனத்தின் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் அவர்கள் கொரானா நோய் தடுப்பு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 11 லட்சம் நிதி வழங்கியுள்ளார்கள். ஏற்கனவே இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ தருமை ஆதீனத்தின் சார்பாக அதன் 27 திருக்கோயில்களில் சிறப்பு யாகங்கள், கூட்டு வழிபாடு, திருமுறை பாராயணம் ஆகியவை தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் அருளாணைவண்ணம் நடத்தப்பட்டது.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள், ஆன்மீக அன்பர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமென குருமகாசந்நிதானம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
இந்தப் பெரும் பணிக்கு மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் தன்னார்வ தொண்டு தன்னார்வலர்கள் சீரோடும் சிறப்போடும் பணியாற்றி வருவதற்கு ஆசீ வழங்கினார்கள்.
கொரானா நோய் தடுப்புக்கு அரசுக்கு பெரும் நிதி தேவை தேவைப்படுகிறது. தருமையாதீனம் மற்றும் ஆதின திருக்கோயில்கள் சார்பாக தருமை ஆதீனம் குருமகாசன்னிதானம் அவர்கள் 11 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பேரிடர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள். மக்கள் சுயகட்டுப்பாடுடன் அரசின் விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருந்து தங்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்கள். பெருந்தொகையை கொரானா நோய் தடுப்புக்கு வழங்கிய தருமையாதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை பாராட்டுகிறது. தொடர்ந்து சைவத்தையும் தமிழையும் மட்டும் வளர்க்காமல் சமுதாயப் பணியிலும் தருமபுர ஆதினம் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறையில் நகராட்சி மருத்துவமனை கட்டுவதற்கு தருமபுர ஆதீனம் இடம் அளித்தது .
அதுபோல பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தருமையாதீனம் இடம் கொடுத்தது.
புதிய பேருந்து நிலையம் அமையவும் தருமையாதீனம் இடம் அளித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்ட அலுவலங்கள் கட்ட 37 ஏக்கர் இடம் அளித்துள்ளது. அதேபோல் தற்போது கொரானா நோய்த் தடுப்புக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 11 லட்சம் கொடுத்தது பாராட்டுக்குரியது. தொடர்ந்து சமயப் பணியில் மட்டுமல்லாமல் சமுதாயப் பணியிலும் ஈடுபட்டு வரும் தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் அவர்களுடைய பொற்பாதங்களை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வணங்கி மகிழ்கிறது என தெரிவித்துள்ளார்.