வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வணிகத்துறை அமைச்சர் கே சி வீரமணி கொராணா வைரஸ் நோயாளிகளுக்கன தனி வார்டை பார்வையிட்டார்.
அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயனிடம் விசாரணை செய்து, மேற்கொண்டு என்னென்ன வேண்டுமோ அதை நான் செய்து கொடுக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது,
கொராணா வைரஸ் நோய் பரவி வருவதால் தமிழக அரசு தமிழக மக்களுக்கு கொராணா வைரஸ் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாள் இந்த நோயை விரட்டி அடித்து விடலாம் ஆகையால் பொதுமக்கள் யாரும் அதிகமாக வெளியில் வர வேண்டாம். இளைஞர்களுக்குமு நான் ஒன்று சொல்ல வேண்டும் நீங்கள் தேவையில்லாத வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது.
தயவுசெய்து இளைஞர்கள் வீட்டிலேயே இருக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்
குடியாத்தம் நகர செயலாளர் ஜே கே என் பழனி, குடியாத்தம் நகர துணைச் செயலாளர் கஸ்பா மூர்த்தி, குடியாத்தம் ஒன்றிய கிழக்கு செயலாளர் ராமு மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், குடியாத்தம் தாசில்தார் வத்சலா, குடியாத்தம் நகர ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் இருந்தனர்