ஆட்டோக்களில் கொரோனா வைரஸ் தடுப்பு ஸ்டிக்கர் 

 

 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தென்காசி வட்டார பகுதியில் ஓடும் ஆட்டோக்களை சுத்தம் செய்து  கிருமி நாசினி  தெளித்து அதன்பின்  தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்படும் ஸ்டிக்கரை ஒட்டி அதன் பின்னரே பொது மக்களை ஏற்றிச் செல்ல வேண்டும். என்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதுபற்றி  தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-. 

 நாடு முழுவதும் கொரோனா வைரஸ்   வேகமாக பரவி  பொதுமக்களை  அச்சுறுத்தலை  ஏற்படுத்தி வரும் நிலையில்  கொரோனா  வைரஸ் தாக்குதலில்  இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பல்வேறு  பேரூந்துகள், வேன்கள், லாரிகள், கார்கள், ஆட்டோக்களை இயக்கி வரும் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், பொது மக்கள்  மத்தியில்  கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் தென்காசி வட்டார பகுதிகளில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு  தெரிவிப்பது யாதெனில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  ஆட்டோ டிரைவர்களின் பங்கு மிகவும் மகத்தானது.

 

ஆட்டோ டிரைவர்கள் தங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் காக்கும் வகையிலும் தனது நலனை பாதுகாக்கும் வகையிலும்  தங்களது ஆட்டோவை நன்கு  சுத்தம் செய்து அதில் நன்றாக கிருமி நாசினி தெளித்து  அதன்பின் ஆட்டோவை தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து காண்பித்து விட்டு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு  ஸ்டிக்கரை பெற்று ஆட்டோவில்ஒட்டிக் கொண்டு அதன்பின் பொது மக்களை ஏற்றிச் செல்ல வேண்டும். 

 

இந்த ஸ்டிக்கரை ஒட்டியுள்ள ஆட்டோக்கள் மட்டுமே பொதுமக்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும்.

 

இந்த ஸ்டிக்கரை ஒட்டாமல் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ப்படும்.  எனவே உடனடியாக தென்காசி வட்டார பகுதிகளில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் உடனடியாக தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொண்டு அங்கு வழங்கப்படும் அக்கரைப்பற்று தங்கள் ஆட்டோவில் ஒட்டிக்கொண்டு பொதுமக்களை ஏற்றி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி அந்த அறிக்கை மூலம் கேட்டு கொண்டுள்ளார்.

Previous Post Next Post