கொரோனா வைரஸ் குறித்து வாரசந்தை நடத்துவது பற்றி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரவிண்குமார் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்து மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களான காய் கறிகள் தக்காளி போன்றவைகள் வழங்குவதற்கு பேரூராட்சி நகராட்சி, ஊராட்சியில் உள்ளிட்ட இடங்களில்
வார சந்தைகளை எப்படி நடத்த வேண்டும் என்று சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கந்தசாமி, விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, வேப்பூர் வட்டாட்சியர் கமலா, விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பொறுப்பு பாண்டு, திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர்.சங்கர், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டு வாரசந்தை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.