தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி (கேன் குடிநீர் உற்பத்தி)நிறுவனங்களை வழி நடத்தும் விதிமுறைகளை அரசு வகுத்து கொடுக்க வேண்டும், வேலை நிறுத்தத்தில் இருக்கும் 1600 க்கும் மேற்பட்ட நிறுவனத்தினரை அரசு தரப்பில் அழைத்து பேச வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என மதுரையில் அச்சங்கத்தினர் கூட்டாக பேட்டி.
தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்)சார்பில் மாநில நிர்வாகிகள் மற்றும் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை யூனியன் கிளப் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள்,
தற்சமயம் தமிழகம் முழுவதும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் எங்களது அமைப்பின் கீழ் இயங்குகிறது. இந்த தொழிலின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றன. நாங்கள் அனைவரும் இந்திய தர அைம வன சான்றிதழ் (BIS), இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் சான்றிதழ் (FSSAI) ஆகியவற்றை முறையாக பெற்று பல ஆண்டுகளாக எங்களது நிலத்தில் சொந்தமாக போர் அமைத்து அதன் மூலம் வரும் நீரை பாதுகாப்பாக சுத்திகரித்து எங்களது பகுதிகளுக்கு அதாவது எங்கள் நிறுவனங்களை சுற்றி உள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கு மட்டுமே குடிநீர் சப்ளை செய்து வருகிறோம். இந்நிலையில் நிலத்தடி நீர் தடையில்லா சான்று பெறாமல் நிறுவஙை்களை நடத்த கூடாதென்றும் அது போல நடத்தப்படும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டதை அடுத்து நாங்கள்
27 - 2 - 2020 முதல் காலவரையற்ற உற்பத்தி மற்றும் விநியோக நிறுத்தத்தை துவக்கினோம், அந்த வேலை நிறுத்தமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாங்கள் எங்களது நிறுவனங்களுக்கு நிலத்தடி நீர் தடையில்லா சான்றை பொதுப்பணி துறையினர் மூலம் பெற கடந்த 2014ம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறோம் ஆனால் எங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டே வருகிறது. மேலும் தற்போது நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தின் பல இடங்களில் நிறுவனங்கள் எந்த வித முன்னறிவிப்புமின்றி அரசு அதிகாரிகளால் மூடி சீல் வைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இது தொடர்பாக எங்கள் நிறுவனங்களை வரைமுறை செய்ய விதி முறைகளை வகுக்க அரசிடம் பலமுறை முறையிட்டு விட்டோம். 2014 முதல் நீதிமன்றத்திலும் முறையிட்டு வாதாடி பார்த்து விட்டோம் பலன் இல்லாததால் தற்போது ஜனநாயக முறையில் அமைதியாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டம் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் அதை எதிர்த்து நடக்கும் போராட்டம் அல்ல, எங்களது வாழ்க்கைக்கு வழி கேட்கும் போராட்டம், மேலும் எங்கள் நிறுவனங்களை வழி நடத்தும் விதிமுறைகளை அரசு வகுத்து கொடுக்க வேண்டும் அரசு தரப்பில் எங்களை அழைத்து பேச வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என தெரிவித்தனர்.