விருத்தாசலத்தில் தீயணைப்பு வாகனத்தில் கிருமிநாசினி தெளிப்பு

விருத்தாசலம் நகராட்சி பகுதிகள் முழுவதும் தீயணைப்புத் துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சாலை பொது இடங்களில்  கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும்  விதமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 144 ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக நகராட்சியில்  நகராட்சி பகுதி பொதுமக்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.  


இந்நிலையில் 
 கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலில் இருந்து மக்களை மீட்பதற்கு  தீயணைப்புத்துறையினர் நகராட்சி ஆணையர் பொறுப்பு பாண்டு தலைமையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக  நகராட்சி தெரு சாலை,பேருந்துநிலையம், மருத்துவமனை, கடைபகுதி அரசு அலுவலகம் மற்றும் பொதுஇடங்களில்  கிருமிநாசினி மருந்து தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் தெளிக்கப்பட்டது.


 இதில் தீயணைப்புத் துறை அலுவலர் செந்தமிழ்வீரர்,   நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குமார், துப்புரவு மேற்பார்வையாளர் சாம் கர்னல், முத்தமிழ்ச் செல்வன், மற்றும் தீயணைப்பு வீரர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.


Previous Post Next Post