கொரோனா விடுமுறையில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 6 பேர் விபத்தில் பலி

திருப்பூர் அருகில் உள்ள அவிநாசியில் உள்ள கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.


தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவாமல் தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கூட்டம் சேர்ந்தால் நோய் பரவலாம் என்பதால் தான் அனைவரும தனிமையாக இருக்க வேண்டும் என்று தான் இந்த விடுமுறை விடப்பட்டு உள்ளது.



விடுமுறையில் சுற்றுலா எல்லாம் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



இந்த நிலையில், சேலம் விநாயகா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் ஊட்டிக்கு தவேரா காரில் சுற்றுலா செல்ல நேற்று நள்ளிரவில் கிளம்பினர்.  அவர்கள் சென்ற தவேரா கார் அவிநாசி பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக  முன்னே சென்ற சிமெண்ட் l லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்ப்பட்டது.



இதில் அந்த கார் அப்பளம் போல நொறுங்கியது.
காரில் சென்று மாணவர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இந்த கொடூர விபத்தில்
 கள்ள குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (21), சூர்யா (21), வெங்கட் (21). சின்னசேலம் சேர்ந்த இளவரசன் (21), வசந்த் (21) 
மற்றும் கார் டிரைவர் ஆகியோர் இரத்த வெள்ளத்தில் பலியானார்கள். மேலும் சந்தோஷ் (22) தர்மபுரி, 
கார்த்தி (21) சேலம்  ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா நோய் பரவாமல் தடுக்க அரசு விடுமுறை அறிவித்த நிலையில், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளாமல் சுற்றுலா செல்ல திட்டமிட்டு காரில் சென்ற போது மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Previous Post Next Post