திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் க.செல்வராஜ் அவர்களிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு
அங்கேரிபாளையம் பகுதியில் வசிக்கும் பீகார் மக்கள் உணவில்லாமல்
தவிப்பதாகவும் அவர்களுக்கு உதவி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் வடக்கு மாவட்ட
கழகத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்கியிருக்கும் சுமார்
400க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளுக்கு வீடு ஒன்றுக்கு 15 கிலோ அரிசி
சிப்பமும், ரொக்கப்பணம் ரூபாய் 500 வழங்கினார்.
இதில் திருப்பூர் khefu
கழகப் பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், அவைத்தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ், வேலம்பாளையம் பகுதி கழகப்
பொறுப்பாளர் கொ.இராமதாஸ், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பெரியார்
காலனி எம்.எஸ்.மணி, துணை அமைப்பாளர் வி.வி.ஜி.காந்தி, வட்டக் கழகப்
பொறுப்பாளர்கள் அய்யம்பெருமாள், ரத்தினசாமி, மகேந்திரன், குட்டி குமார்,
ஸ்ரீதர் உள்பட கழக இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள்
பலர் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களிடம் பீகாரின் முன்னாள் துணை
முதல்வர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் டுவிட்டர் மூலமாக திருப்பூரில் வசிக்கும்
பீகார் மக்கள் உணவில்லாமல் தவிப்பதாக உதவி கோரியிருந்தார். அந்த தகவலின்
அடிப்படையில் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்
ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் knfZ
எம்.எல்.ஏ., அவர்களின் அறிவுறுத்தலோடு, திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் க.செல்வராஜ் அவர்களின் ஆலோசனையின் படி திருப்பூர் மாநகர்,
வீரபாண்டி பகுதிக் குட்பட்ட ஆண்டிபாளையம் கோழிப்பண்ணை பகுதியில் உள்ள
பீகார் தொழிலாளிகள் 25 பேருக்கு 15 நாட்களுக்கு njitahd அரிசி, காய்கறி,
மாளிகைப் பொருட்களை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர்
ஈ.தங்கராஜ் வழங்கினார். இதில் பகுதி கழகப் பொறுப்பாளர் பி.முருகசாமி,
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திருப்பூர் கோ.அனந்தன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.