பூண்டி நெசவாளர்காலனி பொதுமக்கள் வரிசையாக நின்று கைதட்டி வாழ்த்து

பிரதமர் மோடி "கொரோனா வைரஸ்" பாதிப்பை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இதற்காக ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்வோர்கள் அனைவருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும், இதற்காக நேற்று ( 22 ந் தேதி ) மாலை 5.00 மணிமுதல் 5.05 வரை வீட்டின் முற்றம், வாயில், மொட்டை மாடியியில் அனைவரும் ஒன்றுகூடி கைகளை தட்டி, மணி அடித்து, கோஷம் எழுப்பி நன்றி தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
               இதைத்தொடர்ந்து பிரதமர்  மோடியின் வேண்டுகோளை நிறைவேற்ற திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி காமாட்சியம்மன் நெசவாளர்காலனி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் முன்வந்தனர். இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு ராமு என்பவரது மளிகைக்கடைக்கு முன்பு குழந்தைகள்,கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஒன்றுகூடி வரிசையாக நின்று கைதட்டி சேவைபுரிவோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 
 

 



Previous Post Next Post