திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம்,சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பாலிக்காடு, சந்தையம்பாளையம் உள்பட 12 வார்டுகளில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவூர் ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி தனது சொந்த செலவில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Tags:
மாவட்ட செய்திகள்