நாட்டை தனியார் மயமாக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய விஷம் - துரைமுருகன்


தமிழக சிறைத்துறையில் ஊழல் முறைகேடு நடப்பது வேதனையளிக்கிறது இதைவிட கொடுமையானது வேறு எதுவுமில்லை - மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டை தனியார் மயமாக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய விஷம் சட்டமன்ற எதிர்க் கட்சி துணை தலைவர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டியளித்துள்ளார்.

 

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் ஜனநாயக மதசார்பற்ற கூட்டணியின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் காட்பாடியில் பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நடைபெற்றது.

 


 

இதனை திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைதலைவருமான துரைமுருகன் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். இதில் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர் பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

 

தமிழக சிறைசாலைகளில் ஊழல்கள் நடக்கிறது. இவர்களுக்கு கொடுக்கபடும் உணவுகள் மிககுறைவு. அதிலும் முறைகேடு ஊழல்கள் என்பது ஒரு நேர்மையான அதிகாரி அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது பாராட்டுகுரியது. இந்த ஊழல் பிணத்தின் மீது இருக்கும் பணத்தை எடுத்து திண்பதற்கு சமமாகும். எல்.ஐ.சி மற்றும் ரயில்வே தனியார் மயமாக்குவது குறித்து கேட்ட போது மத்திய அரசு நாட்டையே தனியார் மயமாக்காமல் போனார்களே அதுவே போதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு குறித்து தமிழக அரசிடம் நியாயம் கிடைக்காது எனவே சி.பி.ஐ விசாரணையில் தான் நியாயம் கிடைக்கும் என்பதால் திமுக சி.பி.ஐ விசாரணையை கேட்கிறது மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே மொழி என்பதை அமுல்படுத்துகிறார்கள் தமிழகத்தில் உள்ள அரசு கொத்தடிமை அரசு அவர்கள் எதை சொன்னாலும் அப்படியே செய்வார்கள் நதிகள் இணைக்கபடும் என்று அறிவித்தார்களே தவிர கோதாவரி காவிரி இணைப்பு பெரிய திட்டம் அதனை செயல்படுத்துவது கடினம் இந்த பட்ஜெட்டில் அதனை செயல்படுத்த வில்லை மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்பட்டது குறித்து கேட்ட போது இந்த பட்ஜெட்டே சரியில்லாத பட்ஜெட் என்று கூறினார்.

Previous Post Next Post