தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை மூலம் திண்டுக்கல் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் நான்கு மீன்வள உதவியாளர் பணியிடங்களை இப்பணி நியமனத்திற்கான வழிமுறைகளின் படி நேரடி பணி நியமனம் செய்திட கீழ்க்காணும் இன சுழற்சி படி (பொது முன்னுரிமை, ஆதிதிராவிடர், ஆதரவற்ற விதவை முன்னுரிமை,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் பிரிவு முன்னுரிமை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமை தலா1 இடம்) 4 பணியிடங்கள்1:5 என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பணியிடத்திற்கு 0C -30, MBC/BC - 32,மற்றும் SC/ST- 35 வயதுக்குள் இருத்தல் அவசியம், ஊதிய விகிதம் ரூ 15900 -50400 [Level 2] ஆகும்.
இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் நீச்சல், வீச்சு வலை வீசுதல்,மீன்பிடி வலை பின்னுதல் மற்றும் தமிழில் எழுத படிக்க அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.மேலும் இத் தகுதிகளுடன் மீன்வளத் துறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியலுடன் நாளிதழ் விளம்பரம் மூலம் பெறப்பட்ட தகுதியான நபர்களை சேர்த்து,மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான தேர்வு குழுவால் நேர்முகத்தேர்வு பின்னர் நடத்தப்படும் எனவே மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் பெயர்,முகவரி, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி, கல்வி மற்றும் வயதுக்கான சான்று,முன்னுரிமை பிரிவிற்கான சான்று[priority] மற்றும் தொடர்புடைய சான்றுகள் அடங்கிய விண்ணப்பத்தை
அலுவலக முகவரி, மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், B4/63, 80 அடி சாலை, நேருஜிநகர், திண்டுக்கல், தொலைபேசி எண் .04 51 - 2427148 ,முகவரிக்கு அனுப்புமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது
Tags:
செய்திகள்