பழனிக்கு செல்லும் நகரத்தார் அரண்மனை பொங்கல் காவடி நத்தம் வழியாக செவ்வாய்க்கிழமை சென்றது.
சிவகங்கை மாவட்டம் நகரத்தார் அரண்மனை பொங்கல் காவடி தேவகோட்டை, காரைக்குடி நகரத்தார் காவடி வைரவேல் மாட்டு வண்டியில் கொண்டு செல்கின்றனர். இதில் 367 அரண்மனை பொங்கல் காவடி குழுவினர், திங்கட்கிழமை இரவு சமுத்திராபட்டியில் வைரவேலுடன் இளைப்பாறினார்கள்.
பிறகு நேற்று(செவ்வாய்க்கிழமை)காலையில் புறப்பிட்ட காவடி ஏந்திய பக்தர்கள் குழு, நத்தத்தை வந்தடைந்தது. நத்தம் மக்கள் திரளாக தரிசனம் பெற சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றனர். பக்தகோடிகளுக்கு அவர்கள் திருநீர் கொடுத்து ஆசி வழங்கிவிட்டு, பழனிக்கு புறப்பட்டனர். திங்கட்கிழமை முதலே பழனி முருகபத்தர்கள் சுமார் 10000 மேற்பட்டோர் திரளாக சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று அரண்மனை பொங்கல் நகரத்தார் காவடி நத்தம் வழியே கடந்து சென்றனர். இதற்காக நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சடகோபி உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் பாதையாத்திரை பக்தர்கள் நடந்து செல்லும் சாலைகளில் மின் வசதி ,குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். காவடி கடந்து செல்லும்போது நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நத்தம் காவல்துறை சார்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து குறிப்பாக இரவு நேரங்களில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு கையில் ஒளிரும் பட்டை, ஒளிரும் குச்சிகளை நத்தம் காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது .