துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம், குப்பை அள்ள, மாசு இல்லாத பேட்டரி ஆட்டோ, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னிமலை ஒன்றியத்திற்கு பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புகையில்லாமல் இயங்கும் இந்த வாகனம் மூலம் குறுகலான சந்துகள் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை அகற்ற முடியும். தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு குப்பைகளை அள்ளிய துப்புரவு பணியாளர்களுக்கு வேலை எளிதாகியுள்ளது. முதல்கட்டமாக தயார் நிலையில் இருக்கிறது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Tags:
மாவட்ட செய்திகள்