பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன், ஆய்வு


திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம்,
காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சீலிடப்பட்டு பாதுகாப்பு அறையில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவலருடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையினையும் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் அரசு பொது இ.சேவை மையத்தினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன், திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
 


 


 


Previous Post Next Post