தென்காசி மாவட்ட அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க துவக்க விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர் சங்க துவக்க விழா மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பொருளாளர் ராஜேஸ்வரன் வரவேற்று பேசினார்.மாநிலத் துணைத்தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். செயலாளர் குமாரசாமி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் செயல் நிலை அறிக்கையை வாசித்தார். அரசு ஊழியர்சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி ஓய்வு பெற்ற ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் கருப்பையா ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்தலவர் நாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
புதிதாக அமைக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கும் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை அறிமுகப்படுத்தி மாநிலச்செயலாளர் ஆறுமுகம் பேசினார். மாநிலத்தலைவர் சீதரன் சங்க அமைப்பையும் செயல்பாடுகளையும் விளக்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :-
தென்காசியில் மாவட்டக்கருவூலம் அமைக்கப்படவேண்டும். தென்காசியில் கூட்டுறவு மூலம் அம்மா மருந்தகம் அமைக்கப்பட வேண்டும்.மாதாமாதம் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவேண்டும்.ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவராக சலீம் முகம்மது மீரான். செயலாளராக சுந்தரமூர்த்தி நாயனார். பொருளாளராக வீ.நாராயணன்.துணைத்தலைவர்களாக பாலுச்சாமி துரைடேனியல் அருணாசலம் பேராசிரியை சங்கரி. இணைச் செயலாளர்களாக ராஜையா செல்லப்பா சின்னத்தம்பி நாராயணன் ஆகியோரும் திருநெல்வேலி மாவட்ட தலைவராக ராஜேஸ்வரன். செயலாளராக குமாரசாமி. பொருளாளராக முத்துகிருஷ்ணன். துணைத்தலைவர்களாக கோபாலன். அபுபக்கர். வைகுண்டமணி. கோமதிநாயகம். இணைச் செயலாளர்களாக பாலசுப்பிரயணியன். முருகன். பத்மநாபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.