சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஆற்றோரம் தெரு மார்க்கெட் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் என 600க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழம் கீரை வகை என ஏராளமான கடைகள் அமைந்துள்ளன இங்கே தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்க கூறுகின்றனர்.
இது சமயம் இந்த பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இந்த பகுதிகளில் சாலை அமைத்து குறைந்தபட்சம் 40 வருடங்களுக்கு மேல் ஆகின்றன பாதாள சாக்கடை திட்ட பணி நிறைவு பெற்ற நிலையில் இன்னும் சரிவர சாலைவசதி சீரமைக்கப்பட வில்லை இதனால் தினந்தோறும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இதனாலேதான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
சில சமயம் சாலை விபத்துகள் நடைபெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது சரியான சாலை வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்கள் கூறுகையில் விரைவில் எங்களுக்கு சாலை வசதி அமைத்து தருவதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்
Tags:
மாவட்ட செய்திகள்