திருவண்ணாமலையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தி.மலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தேசிங்கு ராஜன் தேர்தல் ஆணையராக செயல்பட்டு தேர்தல் நடத்தினார். இதில் புதிய மாவட்ட தலைவராக ஏ.முருகன், செயலாளராக ஏ.ஜி.அயூப்கான் பொருளாளராக ஆர்.சிவராஜ் மகளிரணி செயலாளர்களாக என்.சுமித்ரா தேவி, ஜி.விமலாதேவி, மாவட்ட துணை தலைவர்களாக எஸ்.தயாளன், அரங்க திருமலை, கே.வி.ரமேஷ், மாவட்ட இணை செயலாளர்களாக எம்.சேட்டு, என்.சந்தோஷ்பிரபு, டி.சிவக்குமார், மாவட்ட தலைமை நிலைய செயலாளராக ஆர்.விஜயகுமார், மாவட்ட சட்ட செயலாளராக ஜெ.குப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக இரா.மண்ணு, கி.சுதாகர், பி.லோகநாதன், வி.அன்புவேலன், ஏ.சங்கர், கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் செய்யாறில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு மையத்தை அமைக்க வேண்டும். 10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கு நியமனம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளராக உயர்நிலை தலைமைஆசிரியர்களுடன் ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்க வேண்டும். மேல்நிலைத் தேர்வுகளுக்கு வழங்கப்படுவதுபோன்று தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்குரிய மதிப்பூதியம் உழைப்பூதியம் 10ஆம் வகுப்பிற்கும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் வாழ்த்தினர். முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் எம்.ஜெயக்குமார் நன்றி கூறினார்.
------------------------------
Tags:
மாவட்ட செய்திகள்