சீனாவிற்கு ஜனவரி 15-ம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ எந்தத் துறைமுகத்திலும் அனுமதிக்கவோ, கப்பலை நிறுத்துவதற்கோ, அனுமதிக்கக் கூடாது" என்ற கப்பல் துறை இயக்குனரின் உத்தரவை மீறி சீனாவில் இருந்து வந்த கப்பல் மற்றும் சீன நாட்டு மாலுமிகள் 15 பேரை தூத்துக்குடி வ.வு .சி துறைமுகத்தில் அனுமதித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது தூத்துக்குடி வ.வு.சி. துறைமுகம்.
உலகத்தை அச்சத்தில் ஆழ்த்தி சீனாவை நிலைகுலைய வைத்த கொரானா வைரஸ் எப்போது யாருக்கு பரவுமோ என்ற பீதியில் உலகெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன, இதனையொட்டி சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தங்கள் நாட்டில் நுழைய உலக நாடுகள் பலவும் தடை விதித்துள்ளன, இதன் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும், பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சீனாவிற்குச் சென்று திரும்பும் இந்திய பயணிகள் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா எனச் சில நாள்கள், தீவிர ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்தியா முழுவதும் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இதற்கெனச் சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட `ரூயி' என்ற சரக்குக் கப்பல், காற்றாலை மின்சாரத்திற்க்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஜனவரி 28-ம் தேதி சீனாவிலுள்ள டாய்சாங் (Taicang) துறைமுகத்திருந்து புறப்பட்டு சாங்காய் வழியாக கடந்த பிப்ரவரி 7-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றது. அங்கிருந்து 8-ம் தேதி புறப்பட்டு, கடந்த 14-ம் தேதி அதிகாலை 7.47 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தது. இக்கப்பலில், மாலுமி வாங்க் லியாங்மிங், ஊழியர்கள் என மொத்தம் 19 பேர் வந்துள்ளனர். இதில், 15 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள். சீன நாட்டினர் 15 பேருடன் வந்த இந்த கப்பலை தூத்துக்குடி துறைமுகத்தில் அனுமதித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
மேற்படி கப்பல் துறை இயக்குனரின் இந்த உத்தரவு, பிப்ரவரி 11-ம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி, 15 சீனர்களுடன் தூத்துக்குடிக்கு வந்த சரக்குக்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது தான் பொதுமக்கள் தரப்பில் கேட்கப்படும் தலையாய கேள்வியாக உள்ளது?
சீனாவிலிருந்து கொரானா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில் "சீனாவிற்கு ஜனவரி 15-ம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ எந்தத் துறைமுகத்திலும் அனுமதிக்கவோ, கப்பலை நிறுத்துவதற்கோ," அனுமதிக்கக் கூடாது என்ற கப்பல் துறை இயக்குனரின் உத்தரவை மீறி கப்பலை அனுமதித்த அதிகாரிகள் யார் ?
சீன நாட்டவர் மூலம் கொரோணா வைரஸ் பரவி விடுமோ என்று பொது மக்கள் மத்தியில் கடந்த இரண்டு நாட்களாக அச்சம் நிலவிய நிலையிலும், துறைமுக அதிகாரிகளின் தரப்பில் இருந்து இது குறித்து ஒரு தகவலும் தராமல் அலட்சியமாக இருப்பதாக ஊடகங்களும் பொதுமக்கள் தூத்துக்குடி துறைமுக சபை மீது குற்றசாட்டை எழுப்பினர்.
இந்நிலையில் இன்று மாலை தூத்துக்குடி துறைமுகம் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் :- `` துறைமுக மருத்துவ அதிகாரி பூர்ணிமா மூலம் அந்தக் கப்பலில் வந்த மாலுமி உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஊழியர்களில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை” எனவும், இதன் மூலம் கொரோணா வைரஸ் பரவி விடும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம், சுகாதாரத் துறையின் அனைத்து விதிகளையும் முறைப்படி பின்பற்றி கப்பல் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கப்பல் துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, மேலும் தினமும் இது தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை இனை இயக்குநருக்கு அனுப்பப்படுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரானோ வைரஸ் உள்ளதா என்பதை கண்டறிய சீனாவிலிருந்து இந்தியா வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகே அனுமதி அளிக்கும் சூழலில், அந்த கப்பலில் இருந்த 15 சீன மாலுமிகளிடமும் அவசரகதியில் சோதனை நடத்தி முடித்து அவர்களை துறைமுகத்தில் அனுமதித்துள்ளனர், இதனால் சீன கப்பலில் வந்த சீன நாட்டவரோடு துறைமுக ஊழியர்களும் , கப்பல் முகவர்களும், சுங்க அதிகாரிகளும் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமலே இனைந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என துறைமுக ஊழியர்களும், சரக்குகளை கையாளும் தொழிலாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்,
மேலும் அந்த செய்திக் குறிப்பில் சீனாவின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் கொரோனோ வைரஸ் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகே அங்கிருந்து புறப்பட்டு 14 நாட்களுக்குள் தூத்துக்குடி துறைமுகம் வந்ததாக கூறினாலும் கடந்த 7 ஆம் தேதி அந்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் 9 மணி நேரம் 50 நிமிடம் நின்றதாக தரவுகள் காட்டுகின்றன.
மத்திய கப்பல் போக்குவரத்து துறை இயக்குநரின் எச்சரிக்கைக்குப் பிறகும் துறைமுகத்திற்குள் சீன மாலுமிகள் 15 பேரை இச்சரக்குக்கப்பல் அனுமதித்தது ஏன்?
கொரானோ வைரஸ் உள்ளதா என்பதை கண்டறிய பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி சோதனைக்கு (incubation period) உள்ளாக்கப்பட்ட பிறகே அனுமதி அளிக்கும் சூழலில், 15 பேருக்கும் ,மியான்மர் நாட்டினர் உட்பட 19 பேருக்கும் சில மணி நேரங்களில் சோதனை எப்படி நடத்தி முடிக்கப்பட்டது ?
நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, துறைமுக ஊழியர்கள், கப்பல் முகவர்கள், மற்றும் தொழிலாளர்களை எந்த வித முன்னெச்சரிக்கையும், ஏற்பாடும் செய்யாமல் அக்கப்பலில் அனுமதித்தது ஏன் ? என்ற நம் கேள்விக்கு இப்போது வரை துறைமுகம் சார்பில் பதில் இல்லை.
துறைமுகம் சார்ந்த சாதனை செய்திகள், தகவல்களை, ஊடகங்களுக்கு உடனுக்குடன் தகவல் தரும் துறைமுக நிர்வாகம், பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள 'சீன கப்பலில் கொரோனா வைரஸ் " குறித்த பொதுமக்களின் அச்சத்தை அலட்சியப்படுத்தி இரண்டு நாள் மவுனமாக இருந்து விட்டு நேற்று மாலை 6 மணியளவில் P R 0 மூலம் சாவதானமாக பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இந்தப் புகார் குறித்து துறைமுக நிர்வாக தலைவர் அறிக்கை வெளியிடாமல் மெளனம் காப்பது சந்தேகத்தையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் அந்த சீன நாட்டிலிருந்து சீன மாலுமிகள் 15 பேருடன் வந்த கப்பல் உதிரிபாகங்கள் இறக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தை விட்டு வெளியேறியது
<script data-ad-client="ca-pub-9702475833502501" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>