சீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 717 பேர் பலியாகியுள்ளார். இந்த வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த டாக்டரும் வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சீனாவில் கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 73 பேர் பலியாகி பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். தங்களது இருப்பை தெரிவிக்க உரக்க கத்துகின்றனர். பதிலுக்கு பக்கத்து குடியிருப்பில் இருப்பவர்கள் கத்துகின்றனர்.
எதுவும் செய்ய இயலாமல், இப்படி கத்தி தங்கள் மன உளைச்சலை தீர்த்துக் கொள்கின்றனர்.