மாதிரவேளூரில் நடைபெற்ற சமூக தணிக்கை கிராமசபா 200 பேருக்கு வேலை அடையாள அட்டை வழங்க முடிவு!!

மாதிரவேளூரில் நடைபெற்ற சமூக தணிக்கை கிராமசபா 200 பேருக்கு வேலை அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது.




கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் நடைபெற்ற சமூக தணிக்கை சிறப்பு கிராமசபா கூட்டத்தில் 200 பேருக்கு புதியதாக வேலை அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் சிவன்கோயில் அருகே மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் நடைபெற்ற வேலைகள் குறித்து சமூக தணிக்கை கிராமசபா கூட்டம் நடைபெற்றது. தற்காலிக தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றார்.



மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா கலந்து கொண்டு சமூக தணிக்கையின் அவசியம் குறித்து பேசினார். ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ், ஊராட்சிமன்றத்துணைத்தலைவர் கவிதா, ஊராட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் திட்டப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த 2019-20 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்த விபரங்கள் சமூக தணிக்கைக்காக பார்வைக்கு வைக்கப்பட்டது. 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்திக் கொடுக்க கேட்டுக்கொள்வது. 200 பேருக்கு புதியதாக வேலை அடையாள அட்டைகளை பெற்றுத்தருவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Previous Post Next Post