பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. அதையட்டி மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்த அரசு தேர்வுகள் இயக்கத்தின் உத்தரவின்படி நேற்று முன்தினம் முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 27,850 மாணவ மாணவிகள் எழுதவுள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கியது. திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வரும் 13ந் தேதிவரை நடைபெறவுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
மாவட்ட செய்திகள்