100ஆண்டு பழைமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகத்தில் ஐந்து வகையான மரக்கன்றுகள் வழங்கப் பட்டது

100ஆண்டு பழைமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகத்தில் ஐந்து வகையான மரக்கன்றுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் வழங்கினார்.



ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் , அக்கரைக் கொடிவேரி,ப ழனி ஆண்டவர் தோட்டத்தில் 100ஆண்டு பழைமை வாய்ந்த  ஸ்ரீ விநாயகர் அருள்மிகு பழனி ஆண்டவர்,  கருப்பராயன்,ஸ்ரீ சப்த கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா அக்கரைக் கொடிவேரி கோவில் கமிட்டியால் சிறப்பாக நடைபெற்றது, கும்பாபிஷேக விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு வருகை புரிந்த பக்தர்களுக்கு ஐந்து வகையான 2000 மரக்கன்றுகள் வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஒ.எஸ். மனோகரன் அக்கரைக் கொடிவேரி ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஊராட்சி கழக செயலாளர் மணி என்கிற வெள்ளிங்கிரி, ஆசிரியர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா திருமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.


Previous Post Next Post