திருப்பூர் பாரப்பாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாமணி இவர் திருப்பூர் மங்கலம் ரோடு பல குடோன் பூச்சி பாளையம் இரண்டாவது வீதியில் எம் பி எம் எக்ஸ்போர்ட் என்ற பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 12 30 மணி வரை ஊழியர்கள் வேலை செய்து உள்ளனர் வேலை முடிந்து ஊழியர்கள் வெளியே வரும்போது பனியன் நிறுவனத்தின் முதல் மாடியில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது உடனடியாக ஊழியர்கள் மேலே சென்று பார்த்தபோது அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் வேகமாக இரண்டாவது மாடிக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு வீரர்கள் நான்கு வாகனங்களில் வந்து சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு இன்று அதிகாலை ஆறு மணி அளவில் தீயை அணைத்து முடித்தனர் இந்த தீ விபத்தின் காரணமாக பனியன் நிறுவனத்தில் இருந்த தையல் எந்திரங்கள் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு தயார் நிலையில் இருந்த பனியன்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது இதன் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது
இந்த தீ விபத்து குறித்து மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.