தேனி-போடியில் மெழுகுவர்த்தி ஏந்தி இஸ்லாமியர்கள் போராட்டம்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக போடி அரண்மனை கட்டபொம்மன் சிலையில் இருந்து தொடங்கி தேவர்சிலை சென்றடைந்து மீண்டும் அரண்மனைக்கு வந்தடைந்தனர்.  அரண்மனையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியும்  சிறப்பு பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தொடர் போராட்டங்களை அறிவித்த போடிநாயக்கனூர் இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக அமைதி ஊர்வலம்,வாயில் கருப்பு துணி கட்டி ஊர்வலம், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம், விரதமிருந்து ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து இன்று 1500 மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

மேலும் மத்திய அரசும் மாநில அரசும் இஸ்லாமியருக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதை தவிர்த்து தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற்று இந்திய ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Previous Post Next Post