ரஜினிகாந்துக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக கூறப்படும் செய்தி இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சு மறுத்துள்ளது.
ரஜினிகாந்துக்கு விசா வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.இந்நிலையி ரஜினி காந்துக்கு விசா மறுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் உண்மை இல்லையென இலங்கை வௌியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.,அத்துடன் தாம் இந்தியாவின் சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய இரு உயர்ஸ்தானிகராலயங்களிலும் விசாரித்தாகவும் அவ்வாறான எவ்வித சம்பவங்களும் இடம்பெறவில்லையெனவும் வௌியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ரஜனிகாந்திடமிருந்து தமது உயர்ஸ்தானிகராலயங்களுக்கு எவ்வித விசா கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் வௌியுறவுத்துறை அமைச்சு கூறுகின்றது.
Tags:
இந்தியா