ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம் 71 ஆவது குடியரசு தினமான இன்று நடைபெற்றது. 1962 ம் ஆண்டு படித்த மாணவிகள் முதல் 2019- ம் ஆண்டுவரை படித்த மாணவிகள் சுமார் 1000- ம் பேர்கள் கலந்து கொண்டனர். இந்த முன்னாள் மாணவிகள் சார்பாக பள்ளியின் வளர்ச்சிக்கு துணைபுரிய ஜே.எப்.எஸ். என்ற அறக்கட்டளையின் துவக்கவிழா நடைபெற்றது.
பள்ளியின்முன்புறம் பேவர் சிமெண்ட் கற்கள் பதித்துக்கொடுத்த முன்னாள் மாணவி மனோன்மணிக்கும் அவரின் தாயார் திருமதி.அங்காத்தாள் கந்தசாமி , மாண்டிசோரி பொருட்களை பள்ளிக்கு தந்த திருமதி கிளாடிஸ் ,பள்ளியை திறம்பட நடத்திவரும் முதல்வர் திருமதி.ஸ்டெல்லா அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருமதி.பார்த்திபா,கார்த்திகேயனி,
மோகன ரஞ்சினி ,பூவிழி,ஹேமலதா,செந்தாமரை,துளசி,ரூபா,மோகன பிரியா ஆகியோர் செய்தனர். ஜெய்வாபாய் பள்ளியில் மெதுவாகப்படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி, மாணவிகளுக்கு கவுன்சிலிங் போன்ற வற்றை நடத்துவது, என முடிவெடுக்கபட்டது..