சிறார்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர் அனுமதிக்க கூடாது!! திருப்பூர் ஆட்சியர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!
திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொது மக்களிடையே சாலை பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது திருப்பூர் வடக்கு , திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் நடைபெற்ற இப்பேரணியினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்; பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பழைய மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தினை வந்தடைந்தது. இப்பேரணியில் காவல்துறையினர், போக்குவரத்துத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பூர் பல்லடம் சாலையில் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய கலெக்டர் செய்தியாளர்களிடம் பேசும் போது 18 வயதுக்கு குறைவான இளம் சிறார்கள் வாகனம் ஓட்டுவது தற்போது திருப்பூர் மாநகரில் அதிகரித்து வருகிறது இதை தடுப்பது பெற்றோர்களின் கடமையாகும், பெற்றோர்கள் இதை கண்காணித்து சிறார்கள் வாகன விபத்துக்களில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்
Tags:
தமிழகம்