சிவபெருமானின் கண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி
நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசி கொள்வார்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான மாணவியாக தமிழை கடவுளாகப் போற்றி வழிபடும் ஆன்மீகவாதியாகசிந்தனைவாதியாக திகழ்கிறார் மாணவி யசோதா நல்லாள் இவர் பெயரிலேயே என்ன தமிழ் வாசனை இதுவல்லவா நம் தமிழ் பெண்ணின் பெருமை.
இந்த இளம் வயதிலேயே தமிழ் மொழியை அதன் தொன்மையை ஆராய்ந்து பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்ற சிறந்த தமிழ் அறிஞராகவும் திகழ்கிறார் மாணவி யசோதா நல்லாள். தமிழில் பால் பற்றுண்டு திகழும் இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்கு புதுப்பாளையம் இந்த கொடுமுடி மண்ணில் தான் கே. பி. சுந்தராம்பாள் அவதரித்தார் தனது இனிமையான கம்பீரமான குரலில் செந்தமிழ் தமிழ் பாடல் பாடி ஒரு காலத்தில் அனைத்து தமிழர்களையும் தனது பாட்டால்
கட்டிப் போட்டார்.
இந்த இளம் வயதிலேயே தமிழ் மொழியை அதன் தொன்மையை ஆராய்ந்து பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்ற சிறந்த தமிழ் அறிஞராகவும் திகழ்கிறார் மாணவி யசோதா நல்லாள். தமிழில் பால் பற்றுண்டு திகழும் இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்கு புதுப்பாளையம் இந்த கொடுமுடி மண்ணில் தான் கே. பி. சுந்தராம்பாள் அவதரித்தார் தனது இனிமையான கம்பீரமான குரலில் செந்தமிழ் தமிழ் பாடல் பாடி ஒரு காலத்தில் அனைத்து தமிழர்களையும் தனது பாட்டால்
கட்டிப் போட்டார்.
அந்த வகையில் அதே மண்ணில் பிறந்த இவர் தனது பாட்டி ஊரான கருமண்டம் பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்து நாச்சிமுத்து புறத்தில் உள்ள சக்தி மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ முடித்தார். சிறு வயதிலேயே இவருக்கு தமிழ் மீது மிகுந்த பற்றுண்டு. இவரது தமிழ் ஆசிரியர் ரத்தினமூர்த்தி தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஆர்வத்துடன் தமிழ் கற்றார் அவரது தமிழ் பேச்சு அதைச் சொல்லிக் கொடுத்த பாங்கு அந்த மிடுக்கு தோரணை யசோதா நல்லாளை ஈர்த்தது. நாமும் இவரைப் போல் பலருக்கும் எளிதான முறையில் தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் ஏற்பட்டது அவரது ஆசையை லட்சியத்தை நிறைவேற்ற கோவை பேரூர் ஆதினம் கல்லூரியில் தமிழ் பி. எட்., பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தார்.
தினமும் காலையில் நடக்கும் தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறை, நூல்களில் இருந்து பாடப்படும் வரிகள் யசோதா நல்லாளை காந்தமாய் ஈர்த்தது. அவரையும் அறியாமல் தமிழ் மீது அளவற்ற அன்பையும் மேலும் சிவபெருமான் மீது அன்பையும் பலமடங்கு பெருகியது சங்க இலக்கியத்தில் கண்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொண்டு வரும் இவரை ஒரு இனிய மாலைப்பொழுதில் சந்தித்து அவரிடம் பேசத் தொடங்கியதும் அவரிடம் தமிழ் ஊற்று பீறிட்டது அவர் பேசும் வார்த்தை பிசிறில்லாமல் பேசிய தமிழ் அடடா அவரது தமிழ் உரையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் எண்ணியது நம் மனம்! அவர் பேச சே வீசியது தமிழ்மணம்! நாம் பேசும்போது தமிழில் ஏதும் பிழை இருந்து விடக்கூடாது என்பதில் அவரிடம்
தனிக்கவனம்! அவர் கூறுவதைக் கேட்போம். எனக்கு தமிழ் மீது இந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ் ஆசிரியர் ரத்தினமூர்த்தி ஐயா தான் தமிழை மிக எளிதாக அவர் சொல்லிக் கொடுத்த பாங்கு நானே அப்படியே உருவகப் படுத்திக் கொண்டேன் இவரைப் போல் நாமும் எளிதாக மற்றவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் என எண்ணினேன் எனது பெற்றோரும் நீ டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று என்று என்னை வற்புறுத்த வில்லை உனக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க என்றார் எனது தந்தை சுப்பிரமணியம் எனக்கு ஆணிவேராக திகழ்ந்தார். தமிழ் எனக்குள் உருவமாக உள்ளது எனது குருதியில் கலந்து விட்டது மேலும் மேலும் கற்றதை மற்றவர்களுக்கு எளிமையாக கற்றுக் கொடுக்க வேண்டும் தமிழ் மொழியின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுள் இருக்கும் விருப்பம் பாண்டிய நாட்டு திருக்கோயில் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினேன்.
நமது கோவில்கள் எத்தனை பழமையானவை? நல்ல நிலையில் உள்ள கோவில்களே இத்தனை பழமையாக இருக்கும் போது சிதிலம் அடைந்த கோவில்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? என எண்ணினேன் அந்த தூண்டுதலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டயபடிப்பை முடித்துவிட்டு பி.எச்.டி முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். தான் பேரூர் தமிழ் கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு அவர்களின் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் என பெருமிதமாகக் கூறினார் திருவாசகம், தேவாரம், பாடும் எனக்கு சட்டென்று உதித்த எண்ணம் தான் சிவபெருமானின் கண்கள் எத்தனை கடவுள்கள் இருந்தாலும் சிவனின் நெற்றிக் கண்ணுக்கு இருக்கும் தெய்வீகம் யாருக்கும் இல்லை. இந்த நிலையில்தான் சிவ பெருமானின் வலது கண் பெரியபுராணம், இடதுகண் திருவிளையாடற் புராணம், நெற்றிக்கண் கந்த புராணம், என்ற வாசகம் எனது சிந்தனையை தொட்டது.
சிவனின் கண்களில் இத்தனை அபூர்வங்கள? ஏன் இதைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்யக் கூடாது? என நினைத்தேன் இதனால் எனக்கு கிடைத்தது சங்க இலக்கியத்தின் கண்கள் என்ற தலைப்பு சிவபெருமான் மட்டுமல்ல தமிழ் காப்பியங்களின் கண்கள் பறவைகள் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளேன். காவியத் தலைவிகள் கண்கள் எப்படி எல்லாம் வர்ணித்துள்ளனர். அது நமது பழங்கால சிற்பங்கள் எப்படி வடிவமைக்க பட்டுள்ளது? என்பதையும் ஆய்வு செய்துள்ளேன். தமிழில் அருளால் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் கவிதை எழுதும் ஆற்றல் மேடையில் பேசும் ஆற்றல் என அனைத்தும் எனக்கு கிடைத்து உள்ளன. இதனால் பல விருதுகளும் எனக்கு கிடைத்து உள்ளன இவை எல்லாம் எனக்கு தமிழ் கொடுத்த கொடை பொக்கிஷம் வரப்பிரசாதம் இவ்வாறு கண்கள் விரிய மனம் குழு களிக்க உவகையுடன் கூறினார் யசோதா நல்லாள் அப்போது அவரது கண்களில் வீசியது தமிழ்ஒளி இந்த ஒளி எட்டுத்திக்கும் பரவட்டும்! மேலும் அவருக்கு பல புகழ் கிடைக்கும். நன்றி.
Tags:
சிறப்பு கட்டுரைகள்