போலி முகவரிகளில் சிம்கார்டு விற்பனை: வின்செண்ட் வழக்கில் தோண்ட தோண்ட வரும் பூதம்!!!

கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வின்சன்ட் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் காஞ்சிபுரத்தில் சிம்கார்டு வாங்கியதாக கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை. 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் போலி முகவரி மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்


தமிழகத்தையே பரபரப்பாக்கிய கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வின்சென்ட் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கொலை செய்வதற்கு முன்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் சுற்றித்திரிந்து ஆகவும் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஏர்டெல் ஏஜென்சி நிறுவனத்தின் ஊழியர்களிடம் கூடுதலாக பணம் செலுத்தி சிம்கார்டு வாங்கியுள்ளனர்.


இதனால் சென்னை கியூ பிராஞ்ச் போலீசார் கடையில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தின் டீலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பச்சையப்பன் ராஜேஷ் காஜா மொய்தீன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்து உள்ளளனர்.


போலி முகவரி கொடுத்து 200க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பணத்திற்காக விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது மேலும் சட்டவிரோதமாக காஞ்சிபுரத்தில் யாரேனும் தங்கி உள்ளார்களா என்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் மேலும் காமாட்சி அம்மன் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் முக்கிய கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மோப்ப நாய் மூலம் பாதுகாப்பு பணியில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்


Previous Post Next Post