ஜப்பான் ஷிட்டோரியூ தேசிய கராத்தே போட்டி: மோளபாளையம் அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை
ஆந்திர மாநிலம் சித்தூரில் நடைபெற்ற ஜப்பான் ஷிட்டோரியூ தேசிய கராத்தே போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 1000 க்கும் மேற்பட்ப மாணவ மாணவியர் கலந்துகொண்டனர் . தமிழகத்தைச் சார்ந்த மோளபாளையம் அரசுப்பள்ளி மாணவி அருள்செல்வி ( +1) மற்றும் கோபி பழனியம்மாள் பள்ளியில் பயிலும் கீர்த்தனா (7) தங்கக் கோப்பையும் , ஓவியா இரண்டாம் பரிசும் வருண் மற்றும் வைனிஷா மூன்றாம் பரிசும் பெற்றனர். இவர்களை வழிநடத்திய செம்பை சார்லி அவர்களையும் ஜப்பான் ஷிட்டோரியூ கராத்தே இந்திய தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ரமேஷ் அவர்களும் நிர்வாகி சென்சாய் மகேஸ்வரன்,நிழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் அகஸ்தியா குழுவினர் பாராட்டினர்.
Tags:
மாவட்ட செய்திகள்