மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் ஓ.ஏ.ஸ் மணியன் தகவல்.
மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்காது என்று அமைச்சர் ஓ.ஏஸ்.மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சீனிவாசாசுப்பராயா அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர்களுக்கு மடிகணிணி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை வகித்தார் மயிலாடுதுறை உதவி ஆட்சியர் மகாராணி, சீர்காழி எம்.எல்.ஏ பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். துணி நூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.ஏஸ்.மணியன் கலந்து கொண்டு 555 மாணவர்களுக்கு மடிக்கணிணி மற்றும் 20 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கி துவக்கி வைத்துப் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தஞ்சை கோயிலில் தமிழில் அர்ச்சனை என்பது வரவேற்கக் கூடியதுதான் அதனால் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடிய அளவுக்கு இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நாம் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் இதனை அரசியலாக்கத் தேவையில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே மத்திய அரசு நடைமுறைப்படுத்த முடியும் ஆனால் மக்கள் விருப்பத்துக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு ஒப்புதல் அளிக்காது என்றார். சீர்காழி தாசில்தார் சாந்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுமதிராஜேந்திரன் , சீர்காழி கூட்டுறவு வங்கித் தலைவர் நற்குணன், ஊராட்சிமன்றத் தலைவர் சந்திராராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் பாஸ்கரன் நன்றி கூறினார்.