கோயம்புத்தூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம்!!

கோயம்புத்தூர்  மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.01.2020 தேதியன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி  தெரிவித்துள்ளார். 


கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர்  சேகாpப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள், மாண்புமிகு முதலமைச்சர்   110 விதியின் கீழ் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்  மேலாண்மை இயக்கம், குடிநீர்  சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், குடியிருப்பு திட்டம்(ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி  கிராம  சாலைகள் திட்டம் ஐஐ மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.


எனவே கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம  சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறாh;கள் என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி  தேரி வித்துள்ளார்.



Previous Post Next Post