கலை நிகழ்ச்சி நடத்துபவர்களால் தாமதமாகும் சென்னிமலை தேர் திருவிழா அழைப்பிதழ்.
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச தேர்த்திருவிழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு வருடமும் 20-25 நாட்களுக்கு முன்பாகவே கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும்.
ஆனால் இந்த வருடம் கொடியேற்றத்திற்கு இன்னும் குறைந்த நாட்களே அதாவது வருகிற 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் தேர் திருவிழா அழைப்பிதழ்கள் இன்னும் தயாராகவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால், தேர் திருவிழா நடைபெறும் நாட்களில் கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் இதுவரை தங்களது கலை நிகழ்ச்சி குறித்த விபரங்களை கோவில் நிர்வாகத்திடம் வழங்காமல் உள்ளனர்.
அதனால் கலைநிகழ்ச்சிகள் நடத்துபவர்களை எதிர்பார்த்துக் கொண்டு கோவில் நிர்வாகத்தினர் உள்ளனர்.
அழைப்பிதழ்கள் இன்னும் வெளி வராமல் இருப்பதால் எந்தெந்த நாளில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என பக்தர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் தங்களது கலைநிகழ்ச்சி குறித்த விபரங்களை ஒரு மாதத்திற்கு முன்பே கோவில் நிர்வாகத்திடம் வழங்கினால் கோவில் நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும் வசதியாக இருக்கும்.
Tags:
செய்திகள்