திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூ மார்க்கெட் கடைகள் காலி செய்யப்பட்டு இடிக்கும் பணி!




திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட் கட்டப்படுவதை ஒட்டி, திருப்பூர் பூ மார்க்கெட் கடைகள் காலி செய்யப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது.

 


 

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பூ மார்க்கெட் இயங்கி வந்தது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கடைகளில் மொத்த, சில்லரை விற்பனையில் பூக்கடைகள் இயங்கி வந்தன. திருப்பூர் மாநகரம் முழுமைக்கும் இங்கிருந்துதான் பூக்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் கடைகள் புதிதாக பூ மார்க்கெட் கட்டுவதற்காக எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஏற்கனவே பழைய பூ கடைகளுக்கு காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.

 

ஆனால் புக் கடைக்காரர்கள் பொங்கல் பண்டிகை முடியும் வரை காலிசெய்ய அவகாசம் கேட்டு இருந்தனர். பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து இன்று காலை மாநகராட்சி உதவி ஆணையர் சபியுல்லா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பூமார்க்கெட் கடைகளை காலி செய்ய அறிவுறுத்தி பொக்கிலின்  உள்ள இயந்திரங்களுடன் வந்து பூ மார்க்கெட் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையில் இருந்த பொருட்களை வியாபாரிகள் காலி செய்து வருகிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பூ மார்க்கெட் தற்போது இடிக்கப்படுகிறது.





 

 



 

Previous Post Next Post