சூலூர் ஜி.கே.எஸ் நகர் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி தொடர்ந்து 9 ஆண்டாக ஜி.கே.எஸ் நகர் குடியிருப்போர் நல் சங்கத்தினர் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கு ஜி.கே.எஸ் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் நாகராஜன், செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார்கள். சிவக்குமார், செந்தில், தட்சிணாமூர்த்தி, சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை செய்திருந்தனர். முதல் நிகழ்வாக அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபாடு நடத்தினர். பின்பு குழந்தைகள் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, பெண்களுக்கான கோலப் போட்டி, மியூஸிக்கல் சேர், கயிறு இழுத்தல், இளைஞர்களுக்கான சைக்கிள் ரேஸ், உறியடித்தல் என்று தமிழ் கலாச்சாரத்தை நியாபகப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப் பட்டது. மாலையில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது.