திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் குறை தீர்க்க ' நம் எம்.எல்.ஏ ' செல்போன் செயலி
எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள சேம்பர்ஸ் ஹாலில் தெற்கு எம்.எல் ஏ., வின் மக்கள் குறைதீர்க்கும் செல்போன் செயலி துவக்க விழா நடைபெற்றது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நம் எம்.எல்.ஏ., என்கிற மக்கள் குறைதீர்க்கும் செயலியை அறிமுகம் செய்தார். அதை சோழா அப்புக்குட்டி பெற்றுக் கொண்டார். முன்னதாக திருப்பூரில் செய்தியாளராக பணயாற்றி வந்த மறைந்த ராஜசேகர், அவரது தாயாருக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு எம்.எல். ஏ., சு.குணசேகரன் பேசும்போது கூறியதாவது:அம்மா அவர்களின் அருளாசியுடன் எம்.எல்.ஏவாக இருக்கிறேன். எங்களால் முடிந்த திட்டங்களை எல்லாம் திருப்பூர் நகரில் செய்து கொண்டிருக்கிறோம்.
என்னை பார்க்க வரும் பொதுமக்கள் என்னை எளிதில் அணுகி பிரச்சினைகளை சொல்ல நம்.எம்.எல்.ஏ., செயலி உருவாக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். பொதுமக்கள் சொல்லும் குறைகள் அன்றைய தினமே தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு எல்லாம் செய்து கொடுத்து வரும் அரசாக இந்த அரசு உள்ளது. இதை தொடர்ந்து இன்னும் சிறப்பாக மக்கள் குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்லடம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க சந்தைப்பேட்டைமுதல் சின்னக்கரை வரை பாலம் அமைக்க திட்டம் தயாராகி வருகிறது. திருப்பூரில் நொய்யல் ஆற்றில் தீபம் பாலம் முதல் மன்னரை வரை சாக்கடை கழிவுகள் சுத்திகரித்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு வாரியம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
விரைவில் அதுவும் அமையும். திருப்பூருக்கு மெட்ரோ ரயில் விட கோரிக்கை விடுத்து இருக்கிறோம். ஏற்கனவே கோவை மெட்ரோ கணியூர் வரை வரவிருப்பதால், லட்சிய திட்டமாக திருப்பூர் மெட்ரோ திட்டத்துக்கும் முதல்வர் ஒப்புதல் அளிப்பார். இப்படி திருப்பூரில் பல நல்ல திட்டங்களை செய்ய இருக்கிறோம். அதற்கு இந்த செல்போன் செயலி ஒரு கருவியாக இருக்கும். என்றார்.சோழா அப்புக்குட்டி துவக்கி வைத்தார். ஆர். டி.சிவக்குமார், அகில் ரத்தினசாமி, கே.எம்.சுப்பிரமணி, ஆண்டவர் ராமசாமி, அம்மா டிரஸ்ட் அனிதா சேகர், எஸ். பி.என்.பழனிசாமி, உஷா ரவிக்குமார், ரோபோ ரவி, அட்லஸ் லோகநாதன், சண்முகராஜ், சபாபதி, சிவானந்தம், முயற்சி சிதம்பரம், சடையபன், டெக்ஸ் வெல் முத்துசாமி, சுபான், முன்னாள் கவுன்சிலர் கணேஷ், வக்கீல் முருகேஷ், தங்கவேல், மார்க்கெட் குமார், பிரபு, விக்கி, ஆறுமுகம், மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:
மாவட்ட செய்திகள்