பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடந்துவருகிறது.


 இதில் 600 காளைகள் பங்கேற்பு, 500 மாடுபிடி வீரர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு களமிறக்கப்படுகின்றனர். ஜந்து வண்ணங்களில் இவர்களுக்கு உடைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. காலை 8 மணி அளவில் ஐந்து ஊர் காளைகளை வாடிவாசல் வழியாக முதல் கட்டமாக அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு விழா தொடங்கி உள்ளது. தொடர்ந்து வரிசையாக காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன. வீரர்கள் போட்டிபோட்டு காளைகளை பிடித்து வருகிறார்கள்.        


இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 500 காவல்துறையினர ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


108 ஆம்புலன்ஸ் மூன்று வாகனங்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் ஒரு கால்நடை வாகனமும் நவல்பட்டு மருத்துவ குழு Dr. சுகுமார் தலைமையிலும்,  காளைகளை பரிசோதிக்க கால்நடை மருத்துவக் குழுவும் காலத்தில் உள்ளனர்.


மற்றும் ஜல்லிக்கட்டை காண சுமார் 6 ஆயிரம் பொதுமக்கள் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலைை முதலே கூட்டம்் நிலவுகிறது.


ஜல்லிக்கட்டு விழாவை  சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். 


Previous Post Next Post