ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு!!






 விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது இதில் கம்மாபுரம் பெண்ணாடம் ஆலடி வேப்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையக் கூடிய நெல், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம்  கொள்ளு, பச்சைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களை விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு தினசரி கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் தாமதம் ஏற்பட்டு இரண்டு நாட்களாக விவசாயிகள் காத்திருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

 

அப்போது விவசாயிகள் தங்கள் கொண்டு வரும் விளைபொருட்களை வாங்குவதில் அதிகாரிகள் காலம் தாழ்த்துவது ஆக குற்றம் சாட்டினார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட சார் ஆட்சியர் விவசாயிகளின் விளைபொருட்களை உடனடியாக வாங்க வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட  கண்காணிப்பாளரிடம் உத்தரவிட்டார். 

மேலும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கிய விளை பொருட்களை  ஒழுங்குமுறை விற்பனை கூட குடோனில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியில் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் 24 மணி நேரத்திற்கு விளைபொருட்களை குடோனில் வைத்து  காலம் தாழ்த்தும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார் .

 

 உழவன் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களின் அன்றாட விலைகள் பற்றி தெரிந்து விழிப்புணர்வு அடைய வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு மொபைல் டாய்லெட் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும் என கூறினார். இந்த திடீர் ஆய்வில் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, துணை வட்டாட்சியர் அன்புராஜ் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் உடனிருந்தனர்.


 

 




 

Attachments area

 


 



 



Previous Post Next Post