பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்

பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் சேர வரும் 13ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கநதசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் 2015ம் ஆண்டு பாரத பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் பெண் குழந்தைகளை பாதுகாத்து, குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்.
இத் திட்டத்தின்கீழ் வருகிற 24ந்தேதி “தேசிய பெண் குழந்தைகள் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது. எனவே, பெண் குழந்தை உள்ளவர்கள் பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் என்ற முகநூல் மூலமோ அல்லது 7397285643 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமோ தங்களது மூன்று தலைமுறை (பாட்டி அம்மா மகள்) பெண் குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பெண் குழந்தையின் முழு பெயர், தாய், தந்தை பெயர் மற்றும் முகவரியுடன் வரும் 13ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த புகைப்படத்திற்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post