வரும் 20 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் தவிர, ஆரோக்யா, ஹெரிட்டேஜ், திருமலா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பால் விநியோகம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு அரசு பால் விலையை உயர்த்தியது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இப்போது மீண்டும் மக்களின் மீதான சுமையை உயர்த்தும் வன்ணம் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் வரும் 20 ஆம் தேதி முதல் பால்விலை லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர்த்த உள்ளனர். அதேப்போல தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
Tags:
தமிழகம்