70 ஆண்டுகளுக்குப் பிறகு தொழுதூர் ஊராட்சி மன்ற தலைவராக ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவரும் துணைத் தலைவராக இஸ்லாமியர் இனத்தைச் சேர்ந்தவரும் பொது மக்களால் தேர்வு.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொழுதூர் ஊராட்சியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவராக ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த குணசேகர் என்பவரும் துணைத்தலைவராக இஸ்லாமியர் இனத்தைச் சேர்ந்த ரியாஸ் பானு என்பவரும் பொதுமக்கள் தேர்வு செய்துள்ளனர். வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு பதவி ஏற்பு விழா கடந்த ஆறாம் தேதியும் துணைத்தலைவர் பதவி ஏற்பு 11ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் தொழுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏற்பு விழா கடந்த 6ம் தேதி நடைபெற்றது இந்த ஊராட்சியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த குணசேகர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணைத் தலைவராக இஸ்லாமியர் இனத்தைச் சேர்ந்த ரியாஸ் பானு என்பவரும் பொதுமக்கள் தேர்வு செய்துள்ளனர். ரியாஸ் பானுவிற்கு பதவி ஏற்பு விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் துணைத் தலைவர் ஜெயந்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத்தலைவர் ரியாஸ் பானுவிற்கு பொன்னாடை போர்த்தியும் இனிப்புகள் வழங்கியும் பாராட்டுக்களை தெரிவித்தனர். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொருளாளர் இரா ரமேஷ் தலைமையில் துணைத்தலைவர் ரியாஸ்பானுவிற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மருதமுத்து, திமுக ராமகிருஷ்ணன், ரமேஷ், தியாகராஜன் ஒப்பந்ததாரர், விசிக ஒன்றிய பொருளாளர் இரா .ரமேஷ், ,வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:
செய்திகள்