உடுமலைபேட்டை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

உடுமலைபேட்டை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை
 கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
 



திருப்பூர்  மாவட்டம், உடுமலைபேட்டை அரசு மருத்துவமனையில், 5 வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  துவக்கி வைத்து
தெரிவிக்கையில், போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் ஒரே நாளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து   வழங்கப்படுகிறது.


நமது மாவட்டத்தில் 1154 மையங்களில்  ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து
ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார்  சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் இவற்றில் 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்துமுகாம்களிலும், போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது.


இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 4616 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர்  ஈடுபடவுள்ளனர். திருப்பூர்  மாவட்டத்தில் சுமார்  2.27 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்து குளிர்  பதன நிலையில் தயார்  நிலையில் உள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு
மருந்து அளித்திருந்தாலும் இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கி பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  தெரிவித்தார்.


இந்நிகழ்வின் போது, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ஜெகதீஸ்வரன், துணை இயக்குநர்  பொது மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள்  சாந்தி, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் , உடுமலைப்பேட்டை வட்டாட்சியர்  தயானந்தன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்  பாண்டியன், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமணை தலைமை மருத்துவர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர்கள் பார்திபன், .சுந்தரபாண்டியன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுரவு சங்க தலைவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




 


Previous Post Next Post