தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழா!!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி  தேசிய கொடியினை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி 61 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.




தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு தேசிய கொடியினை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வண்ண பலூன்கள் மற்றும் சமதானத்தினை வலியுறுத்தும் விதமாக புறாவினை பறக்கவிட்டார்.பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை கலெக்டர் சந்தீப் நந்தூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிறப்பாக பணியாற்றிய 38 காவல் துறையினருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.



பின்னர்   முன்னாள் படைவீரர்  நலன், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர்  நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 473 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து 6 பள்ளிகளை சேர்ந்த 635 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், மாவட்ட ஆதிதிராவிடர்  நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000/- ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.26,742/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.18,00,000/-ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட தொழில் மையம் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.44,00,000/- ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட சமூக நலத்துறை மூலம் 15 பயனாளிகளுக்கு



ரூ.6,25,000/-ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,02,000/-ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,28,000/-ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.1,04,25,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,  வேளாண்மைத்துறை மூலம் 7 விவசாயிகளுக்கு ரூ.46,800/-ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,  சிறுசேமிப்பு துறை மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.14,000/-ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 61 பயனாளிகளுக்கு ரூ.1,76,79,542 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  கலெக்டர் வழங்கினார்.



சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்திய தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர்  மேல்நிலைப்பள்ளி, நாசரேத் தூய. யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவந்தி ஆதித்தனார்  பதினம மேல்நிலைப்பள்ளி, கொங்கராயக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம் பி.எம்.சி. பதின்ம மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி  கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர்  (வருவாய்) விஷ்ணு சந்திரன், சப் கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி காவல் கண்காணிப்பாளர்  (பயிற்சி) ஆல்பா;ட் ஜான், மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குனார் தனபதி, மாவட்ட கலெக்டரின்  நேர்முக உதவியாளர்  (பொது.பொ) அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தனபிரியா (திருச்செந்தூர்), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகெளரி, தூத்துக்குடி வட்டாட்சியர் சிவக்குமார்  மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர் .



 


Previous Post Next Post