கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீக்குண்ட இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதுபோல் இந்தாண்டும் கடந்த மாதம் 26 ந்தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. 6 ந்தேதி சந்தனகாப்பு அலங்காரம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 8 ந்தேதி மாவிளக்கு பூஜை குண்டம் திறப்பு பொங்கல் வைத்தல் படைக்கலம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுவான 9 ந்தேதியான இன்று காலை அம்மையழைத்தலை தொடர்ந்து திருக்கோடி ஏற்றப்பட்டு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முதலில் தலைமை பூசாரி கோபால் தீக்குண்டம் இறங்கி குண்டம் இறக்கும் நிகழ்சியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பூசாரிகள் கோயில் வீரமக்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் காவல்துறையினர் அரசு உயர் அதிகாரிகள் என லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி கொண்டத்துக்காளியம் அருள் பெற்றனர். தீக்குணடம் இறங்க 15 நாட்கள் கடும் விரதமிருந்து மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தீக்குணடம் இறங்கினர். இவ்விழாவிற்கு ஈரோடு கரூர் கோவை திருப்பூர் நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா கேரளா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இவ்விழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் தலைமையில் ஐந்து துணைக்கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 16க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் 50க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் தலைமைக்காவலர்கள் ஊர்காவல்படையினர் போக்குவரத்து காவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக சுகாதாரத்துறையின் சார்பில் தற்காலிக கழிப்பறை வசதிகள் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிந்தது. வருவாய் துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறையினர் சார்பில் திருவிழா ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்து. இதனை தொடர்ந்து 10 ந்தேதி திருத்தேரோடமும் 11 ந்தேதி இரவு மலர்பல்லக்கு என்னும் முத்துபல்லக்கு உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 14ந்தேதி மஞ்சள்நீர் உற்சவம் நடைபெற உள்ளது .
Tags:
மாவட்ட செய்திகள்