திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான குட்கா விற்பனையில் ஈடுபட்டும் மற்றும் பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்ப்படுத்தும் வகையிலும், குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த குட்கா வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் ஆணையிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கல்யாணப்பூர் தேசிப்புறா பகுதியை சேர்ந்த தல்லாராம் மகன் சர்வன்ராம் (வயது 25), அவரது தம்பி தினேஷ் (வயது 24) ஆகியோர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரத்தில் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட 750 கிலோ குட்கா இவர்கள் தான் திருப்பூருக்கு கடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
தமிழகம்